அருள்மிகு ஸ்ரீ கண்டியம்மன் துணை
அருள்மிகு ஸ்ரீ கண்டியம்மன் திருக்கோயில்
கீரனூர்
அன்புடையீர் வணக்கம்,
☆அருள்மிகு கண்டியம்மன் திருக்கோயில் திருவிழாக்களை சிறப்பாக செயல்படுத்த அனைத்து கிராமங்களில் உள்ள நமது பவளகுல கணக்கன் குல சொந்தங்களை ஆலோசித்து செயல்பட வேண்டி உள்ளதால் எளிதில் அனைவருக்கும் தகவல் பரிமாற்றம் செய்ய அடிப்படை கணினி தகவல் தொகுப்பில்; (DIGITAL DATABASE) அனைவரது முகவரி விபரங்களை பெற்று பதிவேற்றம் செய்து புத்தகமாக வெளியிட உள்ளதால் பவள குல கணக்கன் குல சொந்தங்களில் 18 வயது நிரம்பிய ஆண் பெண் அனைவரது விபரங்களையும் படிவத்தில் பூர்த்தி செய்து ஆதார் அட்டை நகலை பாஸ்போர்ட் சைஸ் புகைபடத்துடன் அனுப்பி திருக்கோயில் முகவரி தகவல் தொகுப்பில் தங்களை இணைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் .
☆நம் பவள குல கணக்கன் குல மக்கள் வசிக்கும் ஒவ்வொரு கிராமத்திலும் நமது குல பெரியவர்களை கலந்து ஆலோசித்து ஸ்ரீ கண்டியம்மன் திருக்கோயில் விழாக்குழு உறுப்பினராக பவள குலத்தில் ஒருவரையும் கணக்கன் குலத்தில் ஒருவரையும் தங்களுக்குள் தங்களது கிராமத்திலிருந்து இரண்டு உறுப்பினர்களை அருள்மிகு ஸ்ரீ கண்டியம்மன் திருக்கோயில் விழாக்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்து தேர்வு செய்யப்பட்ட விழாக்குழு உறுப்பினர் மூலமாக
பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை ஸ்ரீ கண்டியம்மன் திருக்கோயில் அறங்காவலர் குழுவிற்கு 31.01.2024 க்குள்
கிடைக்கச் செய்து பவள குல கணக்கன் குல சொந்தங்கள் பூர்வீக கிராமத்திலிருந்து புலம் பெயர்ந்து
எங்கு வசிக்கிறோம் என்பதை எளிதில் அறிந்து கொண்டு நம் குல மக்களுக்குள் கோயிலில் நடக்கும்
கூட்டங்கள் பற்றிய தகவல் பரிமாற்றங்களை எளிதில் செய்துகொள்ளவும் திருவிழா அழைப்பிதழ் மற்றும்
கோயில் பிரசாதங்கள் அனுப்புவதற்கும் திருவிழா பணிகளில் நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து இயங்குவதற்கும்
"அருள்மிகு ஸ்ரீ கண்டியம்மன் திருக்கோயில் தகவல் தொகுப்பு முகவரி புத்தகம்''
உதவும் என்பதால்; அனைவரும் தவறாமல் தங்கள் முகவரி விபரங்களை படிவத்தில் பூர்த்தி செய்து கொடுத்து ஒத்துழைப்பு நல்குமாறும், தகவல் தொகுப்பு புத்தகம் தயார் செய்வது பற்றி தகவல் தெரியாதவர்களுக்கு அருகில் உள்ளவர்கள் தகவல் தெரிவித்து அனைவரையும் இணைத்துக் கொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இங்ஙனம்,
திரு.T.D.கணேஷ்குமார் BBA,அறங்காவலர்குழுத்தலைவர், பழநி,Cell: 9942541133,
திரு.K.பொன்னுச்சாமி, வேலம்பட்டி,Cell :9943438910,
திரு.G.குமரகிரி DME,கோவை,Cell : 9629315777 ,
திரு.S.சத்தியமூர்த்தி B.Sc சின்னவீரம்பட்டி,Cell : 6385459568,
திரு.P.கனகராஜ் பனம்பட்டி,Cell: 9965314725,
அறங்காவலர்குழு உறுப்பினர்கள்,
அருள்மிகு ஸ்ரீ கண்டியம்மன் திருக்கோயில் கீரனூர்,
பழநி வட்டம் ,
திண்டுக்கல் மாவட்டம்.